science

img

மார்ஸ்குவேக் : செவ்வாய் கிரகத்தில் முதல் நில அதிர்வு பதிவு

நாசாவின் இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகத்தில் முதல் நில அதிர்வு நிகழ்வை பதிவிட்டுள்ளதாக கலிபோர்னியாவில் உள்ள ஜெட் புரோபல்சன் ஆய்வகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி இன்சைட் லேண்டர், செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த இன்சைட் லேண்டர் ரோபோ செவ்வாய் கிரகத்தில் குழி தோண்டி, அதில் பொருத்தப்பட்டிருக்கும் சிறிய நிலநடுக்கம் பதிவிடும் கருவி மூலம் அங்கு ஏற்படும் நில அதிர்வுகளை பதிவு செய்து பூமிக்கு அனுப்பும்.

இந்த பதிவுகளை கொண்டு, ஜெட் புரோபல்ஷன் ஆய்வக விஞ்ஞானிகள் இதனை ”மார்ஸ்குவேக்” என்றும், இதன் அளவு சுமார் 2.5 என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி, அதாவது 128வது மார்ஸியன் நாளில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த அதிர்வுகள், செவ்வாயின் மேற்பரப்பில் ஏற்பட்டதா அல்லது உட்பகுதியில் ஏற்பட்டதா என்பதை குறித்து மேலும் ஆய்வு நடத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


;